17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராஜபாளயத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி; காற்றில் பறந்த சமூக விலகல்!

இராஜபாளயத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி; காற்றில் பறந்த சமூக விலகல்!

எழுதியவர்: Askar June 8, 2020, 6:00 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மத்திய அரசின் கொரோனா விதிகளுக்கு ஏதிராக காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பங்கேற்ற நிகழ்ச்சியில் சமூக விலகலை கடை பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி நிவாரண பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசு கலந்து கொண்டு வழங்கினார்.

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கொரோனா விதிகளுக்கு எதிராக சமூக விலகலை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம் கூடியதால் தொற்று பரவும் நிலை காணப்பட்டது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் இத்தகைய சமூக விலகலை கண்டுகொள்ளாததால் கட்சி நிர்வாகிகளிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குறைவான நிவாரண பொருட்கள் மட்டும் இருந்ததால் அதனை பெற கட்சியினர் தங்களுக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? என முண்டியடித்துக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!