17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ” கவன ஈர்ப்பு ” கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ” கவன ஈர்ப்பு ” கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2020, 3:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் தேன் அமுதன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்யராசுவளவன் முன்னிலையில் ஓபிசி இட ஒதுக்கீடு தனியார் துறையில் இட ஒதுக்கீடு சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தலித் ஊராட்சி யாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் “கவன ஈர்ப்பு ” கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கீழக்கரை நகர் சிறுத்தைகள் சார்பில் நகர் செயலாளர்  பாசித் இலியாஸ் மற்றும் நகர் பொருளாளர் ஹிதாயத்துல்லா மேலும் மாவட்ட துணை நிர்வாகி பஹத் மற்றும் இளஞ்சிறுத்தை ஜாசிம், தொகுதி செயலார் அற்புத குமார், மாவட்ட துணை அமைப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!