17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்று படுகையில் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஒருவர் கைது

வைகை ஆற்று படுகையில் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஒருவர் கைது

எழுதியவர்: mohan June 8, 2020, 12:07 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே கொடிமங்கலம் அருகே உள்ள தாரா பட்டி வைகை ஆற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதை யடுத்து நாகமலை புதுக்கோட்டை போலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது தாராப் பட்டிகிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், அஜித் ,ராஜா ஆகிய மூவரும் வைகை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு ரோந்து செய்ததில் இருசக்கர வாகனத்தில் சாக்குப்பைகள் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த மூன்றுபேரை கையும் களவுமாக பிடித்த போது அதில் ராஜ்குமார் மட்டும் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.மீதமுள்ள அஜித் மற்றும் ராஜா இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

சிக்கிய ராஜ்குமாரை பிடித்து அவரிடம் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் 100 மணல் மூட்டைகளை கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து ராஜ்குமாரை வழக்கு பதிவு செய்து கைது செய்து பழனி சப் ஜெயிலில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.மேலும் தப்பி ஒடிய அஜித், மற்றும் ராஜாவை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!