17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பயங்கரம்; நோயாளி வெட்டிப் படுகொலை:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பயங்கரம்; நோயாளி வெட்டிப் படுகொலை:

எழுதியவர்: Askar June 8, 2020, 11:31 am

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகன் என்பவரை மருத்துவமனையில் புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பலத்த ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உடன் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 40 உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரை அரசு ராஜாஜி எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் அரசு மருத்துவமனையில் ஆயுதங்களுடன் அத்துமீறி புகுந்து முருகனை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பியோடினர்.

பின்பு தகவல் அறிந்த காவல்துறை துணை கமிஷனர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்றும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் குறிப்பாக விடிய விடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஆயுதங்களுடன் உள்ள புகுந்து படுகொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!