17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!

எழுதியவர்: Askar June 7, 2020, 10:43 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழ்மையாைனவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியில் வசிக்கும் 150 க்கும் மேற்ப்பட்ட கிறிஸ்துவர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!