18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் வேகமெடுக்கும் அரசு வளா்ச்சிப்பணிகள்

உசிலம்பட்டி பகுதியில் வேகமெடுக்கும் அரசு வளா்ச்சிப்பணிகள்

எழுதியவர்: mohan June 7, 2020, 3:16 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் அனைத்து போக்குவரத்து வாகங்கனங்களும் முற்றிலும் நிறுத்தபட்டன. இதனால் பல்வேறு பணிகளுக்கு பொருட்கள் கிடைக்காமல் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் அரசு ஊரடங்கு தளர்த்தியுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் தடை ஏற்படுள்ள அனைத்து அரசின் வளர்ச்சி திட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பேரையூர் ரோட்டில் நகராட்சி சார்பில் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் பல இலட்சம் மதீப்பீட்டில் கட்டப்படும் கூட்டுகுடிநீர் திட்ட பணிகள், மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள குண்டும் குழியுமான சாலைகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் அரசு மருத்துவமணையில் புற வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம் என அனைத்து அரசு வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!