18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியதாக முதியவர் போக்சோவில் கைது!

3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியதாக முதியவர் போக்சோவில் கைது!

எழுதியவர்: Askar June 7, 2020, 2:56 pm

3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியதாக முதியவர் போக்சோவில் கைது!

மதுரையில் தொடரும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களால் பெற்றோர்கள் அச்சம்.

மதுரை சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்ற 66வயது முதியவர் தன் பக்கத்துவீட்டில் வசிக்கும் 3ஆம் வகுப்பு படிக்ககூடிய 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து துன்புறுத்தியநாக அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் நள்ளிரவில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமியின் தாயார் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஏற்கனவே சிறுமி தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடும் சில முதியவர்கள் பணத்திற்காக வட்டிக்கு வாங்கிய நபர்களின் வீடுகளில் உள்ள குழந்தைகளும், இளம்பெண்களுக்கும் பாலியல் ரீதியான வன்புணர்வுகளில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!