தாண்டிக்குடி பகுதியில் விளையும் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் அமோக விற்பனை!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதிகளான தடியன்குடிசை, பெரும்பாறை,ஏனிக்கல், பன்றிமலை ஆகிய பகுதிகளில் இருந்து முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பழமும் இனம்வாரியாக ரூபாய் 150 முதல் நான்கு நூறு மற்றும் ஐந்து நூறு வரை பிரிக்கப்பட்டு ஆத்தூர் தாலுகா பகுதிகளான சித்தரேவு, சித்தையன் கோட்டை, செம்பட்டி பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தாண்டிக்குடிமலைப்பகுதியில் ஏனிக்கல் என்ற பகுதியில் விளையும் பலாப்பழத்திற்கு தனி சுவை உண்டு என்பதை இப்பகுதி மக்கள் அறிந்த ஒன்று ஆகவே, விற்பனையாளர்களிடம் இது ஏனிக்கல் பழம்தானா என உறுதிபடுத்தி பழத்தை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.




You must be logged in to post a comment.