18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து 7 வது முறையாக நிவாரண உதவிகளை வழங்கி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

தொடர்ந்து 7 வது முறையாக நிவாரண உதவிகளை வழங்கி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

எழுதியவர்: mohan June 7, 2020, 3:08 pm

மதுரை மாவட்டம், திருமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று நோயால் வேலையில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் 300 தமிழ் குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி-கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாநில துணைச் செயலாளர் A.R.அய்யங்காளை ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கபட்டது.

300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் சமூக இடைவேயை கடைபிடித்து அரிசி உணவுப் பொருட்கள் பெற்றுச் சென்றனர்.தொ டர்ந்து 7 வது முறையாக 2100 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை அய்யங்காளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இதில் தெற்கு மாவட்ட பொருளாளர் அகிலன் நேரு, திருமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழக்கடை சுப்பிரமணியன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல்பட்டி யோகா கதிர்மாறன் ஆகியோர் தலைமையில் மாநில துணைச் செயலாளர் A.R.அய்யங்காளை, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் கலைச்செல்வன், SMP காலணி கண்ணன், 94வது வார்டு செயலர் வெற்றிச்சுடர் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தொகுதி துணைச் செயலாளர் சிந்தனைவளவன், கள்ளிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ந.மாரியப்பன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகன், கள்ளிக்குடி ஒன்றிய பொருளாளர் முத்து  தனக்கண்குளம் பழனி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மதுரை தெற்கு மாவட்டத்தில் 7 வது முறையாக தொடர்ந்து வழங்கி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!