17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள்

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள்

எழுதியவர்: mohan June 7, 2020, 1:57 pm

மதுரை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்தது.இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மேற்கண்ட தேதியில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தலைமை அதிகாரி அலுவலகத்தில் சிலரிடம் பேசியபோது,

“மதுரை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எஸ்எஸ்எல்சி மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பள்ளி நிர்வாகம் சார்பில் வீடுவீடாக ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.அதில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகமூடி கவசம் அணிந்த நிலையில் பயணிக்க வேண்டும்.

எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடக்க உள்ள தேர்வு மையங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் கட்டாயம் முகமூடி அணிந்து வரவேண்டும்.மாணவர்கள் படிக்கும் பள்ளிக் கூடத்திலேயே தேர்வு மையம் அமைக்க உள்ளோம். அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்.வெளியூர்களில் தங்கியிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவ மாணவிகள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி அலுவலகம் மூலம் பள்ளிக்கூட நிர்வாகம் இ பாஸ் பெற்று தரலாம்.

அவர்கள் வருகின்ற 11ம் தேதிக்குள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் நாளை (எட்டாம் தேதி) முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில் எழுதும் மாணவ மாணவிகளின் வசதிக்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த பேருந்துகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்து உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!