17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan June 6, 2020, 2:08 pm

உசிலம்பட்டி வட்டம் நடுப்பட்டி ஊராட்சி பெரியபாலார்பட்டிகிராமத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர் பொது இடம் 4.5 ஏக்கரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பல வகை மரங்களை நட்டு சுமார் 6 மாதத்திற்கு மேலாக வளர்த்து வருகின்றனர். அவர்களை ஊக்கு விக்கும் வகையில் உசிலையின் பசுமை கரங்கள் சார்பில் 05/06/2020 உலக சுற்றுச்சூழல் தினத்தில் பாராட்டி இன்னும் சில நாட்களில் 100 மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது.

இந்த ஊர் கிராம மக்கள் போல அனைத்து ஊராட்சிகளிலும் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பெரிய பாலார்பட்டி கிராம இளைஞர்கள் கேட்டு கொண்டது மிகவும் வரவேற்க தக்க ஒன்று.பெரிய பாலார்பட்டி கிராம மக்கள் உசிலையின்பசுமைகரங்கள் அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனா்

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!