செங்கம் கிளை சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி திடீர் ஆய்வு!
செங்கம் கிளை சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சிறைச்சாலையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரையாண்டு ஆய்வை மேற்கொள்ளவும் வேலூர் சரக டிஐஜி ஜெயபாரதி சிறைச்சாலைக்கு சென்றார்.
அங்கு சென்ற அவர் கைதிகளிடம் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா, அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் முறையாக கிடைக்கப்பெறுகிறதா, என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
செங்கம் கிளைச் சிறைச்சாலை அதையடுத்து அவர் செங்கம் கிளை சிறையிலிருந்த விசாரணை கைதிகள் எத்தனை பேர், பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர், உள்ளிட்டவைகள் குறித்து சிறை கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் கேட்டறிந்தார் இந்த ஆய்வு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.