18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது!

இராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது!

எழுதியவர்: Askar June 5, 2020, 10:20 pm

இராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை.

விருதுநகர் மாவட்ட்ம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் இசக்கி முத்து என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இசக்கிமுத்து கட்டிட தொழில் வேலைக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் அருகிலிருந்த கண்மாய் பகுதியில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்க்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!