17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி!

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி!

எழுதியவர்: Askar June 5, 2020, 9:58 pm

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி!

தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்அதை கருத்தில் கொண்டு,

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்தாருக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை பள்ளியின் நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மாணவர்களோடு வந்து பொருட்களை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி சுதாகரன், நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜின், நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சங்கரேஸ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமமூர்த்தி, கணேசன் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!