18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா!

தனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா!

எழுதியவர்: Askar June 5, 2020, 9:20 pm

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து!

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் விருதுநகரில் வேளாண்மைதுறை அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும்கேக் வெட்டி பிரியாணி விருந்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல தளர்வுகளுடன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து 50 சதவீத ஊழியர்களுடன் முக கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விருதுநகரில் மதுரை சாலையில் அமைந்துள்ள வேளாண் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வேளாண்மை விற்பனைக்குழுவின் உரிமை இடங்களின் ஆய்வாளர் பால்பாண்டி என்பவர் தனது பிறந்தநாளை வேளாண்துறை அலுவலகத்திலேயே சக ஊழியர்களுடன் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் பிரியாணி விருந்துடன் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன கொரோணா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் அனைத்து துறை அரசு உயரதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் வேளாண் துறையை யாரும் கண்டு கொள்வதில்லை மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து கொரோணாவுடன் போராடிவரும் நிலையில் இது போன்ற ஒருசில பொறுப்பற்ற அரசு ஊழியர்களின் செயல் பொதுமக்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து வேளாண்மை துறை உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் முறையான விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!