17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

இராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

எழுதியவர்: Askar June 5, 2020, 9:07 pm

இராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதியில் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் முயல் மற்றும் காட்டு பன்றிகளை நாய்கள் உதவியுடன் வேட்டையாடி சித்திரவதை செய்த வீடியோ டிக்டாக் -கில் வீடியோவாக வலம் வந்துள்ளது.

வீடியோவினை அடிப்படையாக கொண்டு இராஜபாளையம் வனத்துறை சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை காவலர்கள் குடல்புரிநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் சிவா என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இவரது டிக் டாக் வீடியோவில் காட்டுப் பன்றிகள் நாய்கள் தாக்குவதும் மேலும் இரவு நேரத்தில் ஒளிவிளக்கு பயன்படுத்தி நாய்கள் மூலம் உயிர்களை வேட்டையாடியது போன்று பதிவிட்டு இருப்பது வனத்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது.

மேலும் வேறு ஏதேனும் வனவிலங்குகளை வேட்டையாடி உள்ளனரா என்ற கோணத்திலும் வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!