18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

எழுதியவர்: mohan June 5, 2020, 6:11 pm

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் வழியாக இலங்கைக்கு மர்மப்படகில் கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான 11 கிலோ 300 கிராம் போதை பொருட்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் போலீசார் 21.3.2020 அன்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து கடத்தலில் தொடர்புடைய கும்பல் குறித்து விசாரித்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் தகவல்படி, தனிப்படை போலீசார் 1 கிலோ 130 கிராம் ஹெராயின், 300 கிராம் கொக்கைன் உள்பட ரூ. 2 கோடி மதிப்பிலான 2 கிலோ 600 கிராம் போதைப் பொருட்கள் மற்றும் மான் கொம்புகள், சிங்கப்பற்கள் ஆகியவற்றை இன்று (05.6.2020) கைப்பற்றினர். இப்பொருட்களை பதுக்கிய கும்பல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிர விசாரணை செய்து வருகிறார்.பறிமுதல் செய்த போதை பொருட்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!