17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடி!குடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.!

சாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடி!குடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.!

எழுதியவர்: Askar June 5, 2020, 5:29 pm

சாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடி! குடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை வெயில் சுட்டெரிப்பதால், சாத்தனூர் அணை நீர் மட்டம், 78.40 அடியாக குறைந்துள்ளது. குறைவான நீர் இருப்பால், குடிநீர் திட்டங்களை சமாளிக்க முடியுமா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், கடந்த மாதம், 4 முதல், 28 வரை அக்னி நட்சத்திரம் சுட்டெரித்தது. ஆனாலும், வெயிலின் தாக்கம் ?தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை மழையும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஏரிகளிலும் நீர் வறண்டு வருகிறது. இதனால், விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 119 அடி உயரத்தில், கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில், தற்போது நீர்மட்டம், 78.40 அடியாக உள்ளது. அணையில், 1,388 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணை பராமரிப்புக்கு, 307 மில்லியன் கன அடி மற்றும் தண்ணீர் ஆவியாதலால் ஏற்படும் இழப்பு, 261 மில்லியன் கன அடி என, பொதுப்பணித்துறை கணக்கிட்டுள்ளது.

எனவே, தற்போதுள்ள நீரை பயன்படுத்தி, பருவமழை காலம் தொடங்கும் வரை, கூட்டு குடிநீர் திட்டங்களை சமாளிக்க முடியுமா என, பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!