18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது

ஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது

எழுதியவர்: mohan June 5, 2020, 6:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கண்மாய் கரை பகுதியில் 35 வயது பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு 16.3.2020 அன்று தகவல் கிடைத்தது. விசாரணையில் ஒடைக்கரை குணசேகரன் மனைவி காஞ்சனா என தெரிந்தது. இது தொடர்பாக, காஞ்சனா மகள் அபிநயா அளித்த புகாரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், காஞ்சனா மர்ம மரணம் குறித்து அவரது உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722 க்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து எஸ்பி., வருண்குமார் அறிவுறுத்தல் படி, தீவிர குற்ற தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காஞ்சனா மர்மச்சாவு தொடர்பாக ஓடைக்கரை ஆறுமுகம் மகன் ஆசைதம்பி, ஞானமுத்து மகன் சாமிநாதன் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடபாக காஞ்சனா ஆசைத்தம்பி, சாமிநாதன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மார்ச் 16ல் ஆனந்தூர் கண்மாய் கரை அருகே வர வழைத்த காஞ்சனாவிடம் பணம் கேட்டனர் பணமில்லை என மறுத்த காஞ்சனா கழுத்தில் கிடந்த செயினை கேட்டனர். தர மறுத்ததால், ஆசைதம்பி தான் வைத்திருந்த துண்டால் காஞ்சனாவின் கழுத்தை இறுக்கி, வாய் மற்றும் மூச்சை நிறுத்த சாமிநாதன் செயினை பறித்தார். இதில் காஞ்சனா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதன் பின்னர் ஆசைதம்பி, சாமிநாதன் இருவரும் செயினை எடுத்து கொண்டு தொண்டியில் உள்ள அடகு கடையில் நகையினை ரூ.1.45 லட்சத்திற்கு அடகு வைத்தனர். இப்பணத்தை இருவரும் பங்கிட்டு கொண்டதாக தெரிவித்தனர். இருவரின் வாக்குமூலம் அடிப்படையில், அடகு வைத்த 5 பவுன் தாலி சங்கிலி மீட்டு, இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!