17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது

உசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது

எழுதியவர்: mohan June 5, 2020, 5:10 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிண்ணிமங்கலத்தை அடுத்துள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் மருதன்(35). இவர் கொத்தனராக வேலைசெய்து வருகிறார்.; இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.இவரது வீட்டிற்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருடைய 15 வயதுடைய மகளுக்கும் மருதனுக்கும் பழக்கமாகியுள்ளது..இருவரும் வீட்டில் ஆளில்லாத போது ஜன்னல் வழியே பார்த்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.9வது படித்துக் கொண்டிருந்த சிறுமியின் அறியாமையை பயன்படுத்தி திருமண ஆசை காட்டி கடந்த 6 மாதமாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் சிறுமி விலக நினைத்தாலும் மருதன் விடாமல் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க சிறுமியின் தந்தை  உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மருதனை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!