17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

பாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

எழுதியவர்: Askar June 5, 2020, 4:53 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தாபா ஹோட்டலில் ஒருவர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்திருப்பதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பாலக்கோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார்விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் பாலக்கோடு  கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த மாது (45) லாரி ஓட்டுனர் என தெரியவந்துள்ளது. இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. போலீசார் விசாரணையில் தாபா ஹோட்டலில் மாது தன் நண்பர்களுடன் மது அருந்தியது தெரியவந்துள்ளது மேலும்உணவக பணியாளர்கள் 9 மணிக்கு உணவகத்தை மூடி விட்டு சென்றுள்ளனர்.
 உயிரிழந்த லாரி ஓட்டுனர் உடன் மது குடித்த இரண்டு நண்பர்களை போலீசார் தேடி வந்தனர் இந்நிலையில் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
அவரிடம் பாலக்கோடு போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!