18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது!

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது!

எழுதியவர்: Askar June 5, 2020, 4:46 pm

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது!

கம்பம் அருகே மறுமணம் செய்துகொண்ட பெண் தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் அவரது 3 1/2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் சித்திரவதை செய்த கொடூர சம்பவம் நடந்தேறி உள்ளது.

தேனி மாவட்டம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கம்பம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த  23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மூன்றரை வயது பெண் குழந்தையுடன் தன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன் சிங்கராஜா அந்த பெண்ணை திருமணம் செய்து காமயகவுண்டன் பட்டியில் வீடு பிடித்து இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கராஜா மனைவியை தாம்பத்திய வாழ்க்கைக்கு அழைத்தபோது மறுத்ததாக, மனைவியை சித்திரவதை செய்து சுவற்றில் தலையை மோதி இரத்த காயத்துடன் கொடுமைப்படுத்தி உள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் 3 1/2 வயது குழந்தையை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து கடித்து துன்புறுத்தியுள்ளார்.

இருவரும் அலறியடித்துக் கொண்டு இரத்தகாயத்துடன் வெளியே வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் கொடுத்த புகாரின் பேரில் சிங்க ராஜாவை போக்சோ சட்டம், 5 உட்பிரிவு கொண்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தந்தை முறையான நபரே குழந்தையை பாலியல் ரீதியாக  கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!