17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..

எழுதியவர்: Askar June 5, 2020, 4:34 pm

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..

பொது ஊரடங்கின் காரணமாக பீடித்தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு குறு தொழில் செய்து வரும் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கட்டாய வட்டி வசூலித்து வருவதாக தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சுயஉதவி குழுக்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை மீறி கட்டாய வட்டி வசூல் செய்வதை தடுத்திட கோரி தென்காசி மாவட்டம் சுரண்டை சிஐடியூ பீடி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பொட்டு செல்வம் தலைமையில், வீ.கே.புதூர் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

இதில்,பீடி சங்க மாவட்ட பொது செயலாளர் வேல்முருகன்  ஓன்றிய செயலாளர் ஆரியமுல்லை, விவசாய சங்க நிர்வாகி சங்கரன் மற்றும் பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கினால் தொழிலாளிகள் வருவாய் இல்லாமல் சிரமப்படும் நிலையில் சுய உதவி குழுக்களின் நுண் நிதி நிறுவனங்கள் அரசின் உத்தரவை மீறி‌ வட்டியை உடனடியாக கட்ட கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!