18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர்! புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம்! மாறுமா அல்லது அதே நிலை தொடருமா?

ஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர்! புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம்! மாறுமா அல்லது அதே நிலை தொடருமா?

எழுதியவர்: Askar June 5, 2020, 4:27 pm

ஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர்! புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம்! மாறுமா அல்லது அதே நிலை தொடருமா?

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கபட்டவுடன் அதன் அருகாமையிலேயே வட்டாச்சியர் தங்கும் இடமும் கட்டப்பட்டது.

ஆனால், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த எந்த வட்டாட்சியரும் அந்த அலுவலகத்தில் தங்கி பனிபுரியாமலும், பயன்படுத்தப்படாமலும் விட்ட காரணத்தால் அந்த கட்டிடம் முழுவதும் புதர்மன்றிய நிலையில், பாழடைந்து பரிதாபமாக காணப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சில வட்டாட்சியர்கள் மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆத்தூர் தாலுகாவிற்கும் புதிய வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரக்கூடிய வட்டாட்சியராவது ஆத்தூர் பகுதியில் தங்கி அரசு பனியை மேற்கொள்வாரா? என்பது ஆத்தூர் தாலுகா பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!