18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

எழுதியவர்: mohan June 5, 2020, 4:20 pm

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உலகம் முழுவதும் இயற்கைக்கான நேரம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கைமீதும், மண்வளங்கள்மீதும், சுற்றுச்சூழலில் ஆர்வத்தை எதிர்கால சந்ததிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதன் ஒருபகுதியாக மக்கள்பாதை மண்டபம் ஒன்றியம் சார்பாக பாம்பனில் குழந்தைகளான லிபிகா, யாழினி, இம்ரான்கான், எல்ஸ், மோசே ஆகியோர்களை ஒருங்கிணைத்து 5 இடங்களில் வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு, தங்கச்சிமடம் பொறுப்பாளர் அந்தோணிதினா தன்னார்வலர், முத்துபவுசலமீன், இருளேஸ்வரன், பிரதீப், இராமேஸ்வரம் நகராட்சி பொறுப்பாளர் ஆனந்த், கணேஷ், விடுதலைகுமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!