18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

எழுதியவர்: Askar June 4, 2020, 10:59 pm

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், குடிமராமத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை, தமிழக ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் குடிமராமத்து பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பு பொறியாளர் குற்றாலிங்கம் ஆய்வு செய்தார்.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுவரும் நர்சரி கார்டன் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். இதில் திட்ட இயக்குனர் சுரேஷ், செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர் கர்ணன், பி.டி.ஓ ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!