18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே 44 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை;ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கிவைத்தார்!

இராஜபாளையம் அருகே 44 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை;ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கிவைத்தார்!

எழுதியவர்: Askar June 4, 2020, 10:43 pm

இராஜபாளையம் அருகே 44 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை;ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கிவைத்தார்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜமீன்நல்லமங்கலம் பகுதியில் 44 லட்சம் மதிப்பிலான பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ்  பேசுகையில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த பாலமானது ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து பாலம் கட்டும் பணி ஆரம்பித்தால் பொதுமக்கள் மற்றும் சமூக பெரியவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவகுமார் ,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சத்தியவதி மற்றும் ஒன்றிய பொறியாளர் அ.ராமமுனீஸ்வரன் , ஒன்றிய துணை தலைவர் துரை ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!