18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளியை கொலை செய்த காவலாளி கைது!

இராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளியை கொலை செய்த காவலாளி கைது!

எழுதியவர்: Askar June 4, 2020, 8:50 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த வேளையில் 02.06.2020 நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அரிசி ஆலையின் காவலாளியாக பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த பெரியாண்டவர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அரிசி ஆலையில் வேலை பார்க்கம் போது இருவருக்கு அவ்வபோது விறகு எடுத்து போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக இருவருக்கும் பல முறை பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில் பெரியாண்டவர் கைது செய்த போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!