18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் »  கீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்

 கீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்

எழுதியவர்: mohan June 4, 2020, 6:11 pm

செம்பனார்கோவில் அருகே கீழையூரில்  மின்கசிவு காரணமாக கூரை வீடு நாசமாயின.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழையூர் ஊராட்சியில் நடுத்தெரு பகுதியில் வசித்து வருபவர்  கோவிந்தசாமியின் மகன் அசோகன்.  இவரது வீடு மின் கசிவின் காரணமாக எரிந்து நாசமாயின. வீட்டிலிருந்த பீரோ, கட்டில் மற்றும்  50 ஆயிரம் மதிப்பிலான மின்  சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து  வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.

தகவலறிந்த    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று அரசின் சார்பில்  அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, புடவை, ரூ.5 ஆயிரமும், சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதி ரூபாய் 2 ஆயிரமும் வழங்கி ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட அசோகன் குடும்பத்திற்கு அரசின் சார்பில் அம்மா வீடு வழங்குவதற்கு உறுதியளித்தார். தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் அருள்ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!