17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை

எழுதியவர்: mohan June 4, 2020, 5:09 pm

மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவரின் உடமைகளில் மூன்று துப்பாக்கி தோட்டா குப்பிகளும், இரண்டு துப்பாக்கி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் புகாடியா லெஷ்மி லாவன்யா ( 41) என்றும்,ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது . துப்பாக்கி தோட்டக்கள் அவரிடம் எப்படி வந்தது , அவருக்கு நக்சல் அல்லது வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்பினருடன் ஏதேனும் தொடர்பா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!