17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்!

திருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்!

எழுதியவர்: Askar June 4, 2020, 3:17 pm

திருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தன்னுடைய காதலை சேர்த்து வைக்க கோரி வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் போலீசார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் பிரசாந்த்(24) இவர் திருமங்கலம் ராஜீவ் காந்தி நகரில் குடியிருந்து வருகிறார் எலெக்ட்ரிசியன் ஆக வேலை பார்த்து வருகிறார் இவர் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இவருடைய காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் தொடர்ந்து காதலை ஏற்க மறுத்து பெண்வீட்டார் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் இதை அறிந்த வாலிபர் பிரசாந்த் திருமங்கலம் நாகையாசாமி நகர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி பெட்ரோலுடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

தற்போது இப்பகுதி மக்கள் தகவல் அறிந்து கூட்டம் கூடி வருகின்றனர் மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் ஆனால் வாலிபர் இறங்க மறுத்து வருகிறார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!