17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

நிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

எழுதியவர்: mohan June 4, 2020, 11:18 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவருபட்டி ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் மேடு சிவன் கோயிலுக்குச் செல்லும் சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி அமைக்கும் பணிக்காக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கி பூமி பூஜை விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், , உதவிப் பொறியாளர்கள் வெற்றி வீரன், டெல்லி பாபு, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, சிலுக்குவார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , நிலக்கோட்டை பேரூராட்சி 6 வது வார்டு கிளை செயலாளர் பூக்கடை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!