17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை தீனியா பள்ளியில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…

கீழக்கரை தீனியா பள்ளியில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2017, 11:39 am

கீழக்கரை தீனியா பள்ளயில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தினுள் இன்று (14-08-2017) நடைபெற்றது.

இக்கண்காட்சியை தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரி முதல்வர் சுமையா தாவுது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் பல அறிவியல் படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

இந்நிகழ்வை தொடர்ந்து நாளை (15-08-2017) பள்ளி வளாகத்தில் கொடியேற்றத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி அறிவியல் துறை தலைவர் பண்பரசி ஃபாத்திமா, டாக்டர் ஆசிக் அமீன், மற்றும் தீனியா பள்ளியின் தலைவர் பாக்கர் ஆகியார் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி காலை 8.45 மணிக்கு தொடங்கி 10.00 மணி வரை நடைபெறும் என்று அறியப்படுகிறது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!