17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 3 கண்மாய்ககளில் குடிமராமத்து பணிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா துவக்கி வைத்தார்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 3 கண்மாய்ககளில் குடிமராமத்து பணிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா துவக்கி வைத்தார்..

எழுதியவர்: Askar June 3, 2020, 9:41 pm

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 3 கண்மாய்ககளில் குடிமராமத்து பணிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைப்பு..

தமிழகத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளிட்டவைகளை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வேப்பங்குளம் கண்மாய், வத்திராயிருப்பு அத்தி கோயில் கண்மாய், காண்சாபுரம் சீவனேரி கண்மாய்கள் கரைகள் சேதமடைந்தும், முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது.

இதனை அடுத்து இந்த 3 கண்மாய்களுக்கும் தமிழக அரசின் சார்பில் சுமார் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!