17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடிய திமுகவினர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடிய திமுகவினர்..

எழுதியவர்: Askar June 3, 2020, 5:46 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடிய திமுகவினர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி 97வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.MLA, தலைமையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.MLA முன்னிலையில் கலைஞர் உருவ படத்திற்கு மலர்தூவியும், பேரறிஞர்அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மாவட்ட கழக துணை செயலாளர் சாவல்பூன்டி மா.சுந்தரேசன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், ஒன்றிய கழக செயலாளர்கள் இரமேஷ், மு.பன்னீர்செல்வம் உள்ளிட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் ஆகியோரின் தலைமையில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு இனிப்புகள் வழங்கி வழங்கப்பட்டது நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!