17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி- தொண்டாின் நகை கடையை திறந்து வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக பிரமுகா்

உசிலம்பட்டி- தொண்டாின் நகை கடையை திறந்து வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக பிரமுகா்

எழுதியவர்: mohan June 3, 2020, 4:50 pm

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் புதுத்தெருவில் திமுக தொண்டரும், திமுக இளமகிழனின் தீவிர விசுவாசியுமான தங்கக்கொடி என்பவர் புதிதாக நகை கடையை திறந்து வைக்க திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு அவர் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதால் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தருவதும் சிரமம் என்றார். ஆனால் திடீரென்று உசிலம்பட்டி நாடார் புதுத் தெருவில் உள்ள நகைக்கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றியும், இனிப்புகள் வழங்கினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!