கொரோனா ஊரடங்கினால் வட மாநில தொழிலாளா்கள் வேலையின்றி தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனா்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருந்து பல்வேறு வட மாநில தொழிலாளர்கள்
அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மூன்று நரிக்குறவர்கள் உடனடியாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்களுக்கு மதிய உணவு இரவு உணவு ஏற்பாடு செய்து கையில் வழிச் செலவிற்கு பணமும் கொடுத்து ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதற்கான ஏற்பாட்டினை உசிலம்பட்டி கோட்டாச்சியா் ராஜ்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையைச் சோ்ந்த டிஆா்ஒ கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.அவா்களுக்கு தேவையான பயணஉதவியை 58 கிராம கால்வாய்த்திட்ட இளைஞா்கள் குழுவைச் சோ்ந்த சௌந்திரபாண்டியன் செய்திருந்தாா்.
உசிலை சிந்தனியா




You must be logged in to post a comment.