17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரளாவில் அன்னாசி பழத்தை உண்ட கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழப்பு…

கேரளாவில் அன்னாசி பழத்தை உண்ட கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2020, 1:41 pm

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் என்றும்  செய்தி வெளியிட்டுள்ளது. அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது.

“அந்த யானைக்கு எங்கு அடிபட்டது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. வலி தெரியாமல் இருக்க, அந்த யானை நிறைய தண்ணீர் குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாயின் இரு பக்கங்களிலும் பல காயங்கள் இருந்தன. பற்கள் இருக்கவில்லை,” என்கிறார் சைலன்ட் வேலி தேசிய பூங்காவின் வனக் காப்பாளர் சாமுவேல்.

வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருந்தார். அந்த கர்ப்பிணி யானையின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த யானை தொடர்பாக வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகுதான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.

பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!