18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அரசு வணிக வங்கியில் தீ விபத்து: பணம் நகைகள் தப்பின

மதுரையில் அரசு வணிக வங்கியில் தீ விபத்து: பணம் நகைகள் தப்பின

எழுதியவர்: mohan June 3, 2020, 11:52 am

மதுரை அய்யர் பங்களாவில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் பெறுமான தங்க நகைகள் பணம் தப்பியது.அய்யர் பங்களாவில் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வங்கி பணியாளர்கள் வருவதற்கு முன்பே, வங்கியின் உள்பகுதியில் தீ எரிந்து புகை வருவதை, அப்பகுதி மக்கள் கண்டனர்.உடனே வங்கி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, தீயை அனைத்தனர்.இதனால் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப் பணம் தீயிலிருந்து தப்பின.இந்த தீ விபத்தில் வங்கியின் மேஜை, நாற்காலிகள், சில ஆவணங்கள் மட்டும் தீயில் கருகியதாக தெரிய வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!