17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு..

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு..

எழுதியவர்: Askar June 2, 2020, 11:07 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு..

விருதுநகர் மாவட்டதில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையும் மாலை நேரங்களில் அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணையான பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 47 அடி முழு கொள்ளளவான அணை நீர்மட்டம் குறைந்து 14 அடியாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் 2 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 16 அடி அடியை எட்டியுள்ளது.

இதனால் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!