17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுப்பாளையம் ஒன்றியத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ 66.56 கடன் உதவி- சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்..

புதுப்பாளையம் ஒன்றியத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ 66.56 கடன் உதவி- சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்..

எழுதியவர்: Askar June 2, 2020, 7:30 pm

புதுப்பாளையம் ஒன்றியத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ 66.56 கடன் உதவி- சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பணை ஓலைப்பாடி மேல் முடியனூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலம் 50 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ66 லட்சத்து 56 ஆயிரம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மேல்முடியனூர் சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.எ பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த கடன் உதவி பயன்படும் கடன்களை திருப்பி தவணைப்படி செலுத்தி மீண்டும் பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும் என பேசினார்.

நிகழ்ச்சியில் சங்க தலைவர்கள் காரப்பட்டு ரமேஷ் பணை ஓளைப்பாடி புருஷோத்தமன் செயலாளர்கள் சக்கரவர்த்தி வெங்கடேஷன் அதிமுக நிர்வாகிகள் பொய்யாமொழி தவமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!