17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் புதிய வகை வெட்டுக்கிளிகள் புகுந்ததால் பரபரப்பு ஏறப்பட்டது.

உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் புதிய வகை வெட்டுக்கிளிகள் புகுந்ததால் பரபரப்பு ஏறப்பட்டது.

எழுதியவர்: mohan June 2, 2020, 6:50 pm

இந்தியயாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் பரவி வருகிறது. முதலில் வடமாநிலங்களில் தாக்கத்தை எற்படுத்திய வெட்டுகிளிகள் கூட்டம் தற்போது தென்மாநிலங்களிலும் படையெடுக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெளியிலிருந்து பறந்து வந்த சில வெட்டுக்கிளிகள் அம்மா உணவகத்தில் புகுந்து, அங்கேயே சுற்றி திரிந்தன.அவை பார்ப்பதற்கு தலைபகுதி பெரியதாக உடைய புதிய ரக வெட்டுக்கிளிகளாக இருந்தன. அதனை பார்த்த அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த வெட்டுக்கிளிகளில் ஒன்றை பிடித்து டப்பாவில் அடைத்து வைத்து எந்த வகையையச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் என்பது குறித்து ஆய்வுக்காக உசிலம்பட்டி வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வகை வெட்டுகிளிகள் என்பது குறித்து அறிந்து ஆபத்தானவையாக இருந்தால் அவற்றை உசிலம்பட்டி பகுதியிலிருந்து ஆரம்ப கட்ட காலத்திலேயே அழிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!