ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் மீனவ கிராமத்தில், ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி இறங்குதளத்திற்கான கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று (02/6/2020) ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு,செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மீன்பிடி இறங்குதளமானது 500 விசைப்படகுகளை நிறுத்த வசதியாக மீனவர் பிடித்து வரும் மீன்களை சேமிப்பிற்கான குளிர்பதன கிடங்கு, சாலை, மீன் ஏலக்கூடம் உள்பட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 100 சதவீதம் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டுமீனவர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், மீன்பிடி இறங்குதளம் அமைப்பதனால் இப்பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் புதிதாக தூண்டில் வளைவு அமைப்பதற்கு ரூ.1.87 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தூண்டில் வளைவானது 315 மீட்டர் நீளம், 1.60 மீட்டர் உயரம் அளவிற்கு அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2020-ஜூன் முதல் வாரம் துவங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.மீன்வளத்துறை துணை இயக்குநர் எம்.வி.பிரபாவதி, உதவி இயக்குநர்கள் யுவராஜ், ராஜேந்திரன் (பயிற்சி), தாசில்தார் அப்துல் ஜப்பார், ஒன்றிய ஆணையர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன்,உதவி செயற்பொறியாளர் (மீன்வளத்துறை) பெ.சிவக்குமார், வனச்சரகர் கோ.வெங்கடேஷ், வட்டாட்சியர் அப்துல் ஜபார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.







You must be logged in to post a comment.