17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

எழுதியவர்: mohan June 2, 2020, 5:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையாத்தேவன் மகன் சுப்பு (55). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளுக்கு இரை தேடி (புற்கள்) ஊருக்கு அருகே உள்ள கிணற்று மேட்டுக்கு சென்றுள்ளார். அப்போது புற்கள் புடுங்கும்போது நிலைதடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் சுப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!