17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்த பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்த பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan June 2, 2020, 4:53 pm

நாகப்பட்டினம் விற்பனை குழு செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடப்பாண்டிற்கான, முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.ஏலத்தை மாவட்ட வேளாண் வணிகதுறை இணை இயக்குநர் ரவிசந்திரன் துவக்கி வைத்து விவசாயிகள் தரமான பருத்தியை கொண்டுவந்து அதிக விலை பெற்றிட அறிவுரை வழங்கினார், மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா கூறுகையில் வாரம் தோறும் திங்கள் கிழமை காலை 11மணிக்கு செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறுவதால் விவசாய பெருமக்கள் தங்களது விளைபொருளை சனிகிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளிலே கொண்டு வந்து விற்பனை கூடத்தில் வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து விளை பொருளுக்கு நல்ல விலை பெற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பருத்தி விவசாயிகள், பருத்தி குறைவான விலைக்கே விற்பனை ஆகும் என்று எண்ணிய விவசாயிகள், அரசு அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் பருத்தி விவசாயிகள் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்ததில் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு விற்பனை ஆனதால் மிகவும் சந்தோசத்தில் திருப்தி அடைந்துள்ளனர்.இன்றைய ஏலத்தில் 43 விவசாயிகள் நூற்றுகணக்கான பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர் அதிகபட்சமாக பருத்தி கிலோ ஒன்றுக்கு ரூ.43.50-க்கும் குறைந்த பட்ச விலை ரூ.39.00-க்கும் ஏலம் போனது.ஏலத்தில் வேளாண் அலுவலர் கிருத்திகா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். முடிவில் விற்பனை கூட பொருப்பாளர் பாபு நன்றி கூறினார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!