மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்
கோயிலில் சாலையோர பழக்கடைகள் , கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பிவி.பாரதி வழங்கினார்.கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி வழங்கினார். அப்போது அ தி மு க பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதிமுக நிர்வாகைகள் கலந்துகொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.




You must be logged in to post a comment.