17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிகரெட் புகைத்த போது வேட்டியில் தீப்பற்றியது. மதுரை முதியவர் பரிதாப சாவு

சிகரெட் புகைத்த போது வேட்டியில் தீப்பற்றியது. மதுரை முதியவர் பரிதாப சாவு

எழுதியவர்: mohan June 2, 2020, 4:30 pm

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கிருஷ்ணாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று இரவு படுக்கையில் அமர்ந்தபடி சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக வேட்டியில் தீப்பற்றியது. இதனால் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் அலறித் துடித்தார்.இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!