18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறைவாசிகள் விடுதலைக்காக இணைய வழி போராட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பங்கேற்பு..

சிறைவாசிகள் விடுதலைக்காக இணைய வழி போராட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பங்கேற்பு..

எழுதியவர்: Askar June 1, 2020, 10:21 pm

சிறைவாசிகள் விடுதலைக்காக இணைய வழி போராட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பங்கேற்பு..

பல்லாண்டுகளாக சிறையில் வாடும் சகோதரர்களை விடுதலை செய்ய கோரி இன்று (01/06/2020) தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் இணைய வழி போராட்டம் நடைபெற்று வருகிறது..

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர்  அலுவலகத்தில் இருந்து சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பதாகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.

இதில் வட சென்னை, தேனி மாவட்ட கம்பம், தென்காசி, செங்கோட்டை, கடலூர், காரைக்குடி, குன்றத்தூர், கானத்தூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தி இணை வழி போராட்டத்தில் பங்கேற்றனர்..

இதில் மாநில செயலாளர் சையது இக்பால், வட சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், சகோதரர் மண்ணடி அப்துல்லாஹ் ஊடக பிரிவு செயலாளர்கள் யாசர் அராபத் சமீர், வஜாகத் அலி தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் காதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!