18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாகனை தாக்கி கொன்ற யானையை இரவோடு இரவாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது!

பாகனை தாக்கி கொன்ற யானையை இரவோடு இரவாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது!

எழுதியவர்: Askar June 1, 2020, 9:46 pm

பாகனை தாக்கி கொன்ற யானையை இரவோடு இரவாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது!

மதுரை மாவட்டம் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள தெய்வானை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிதாஸ் எனும் பாகனை தாக்கியது இதில் பாகன் பலியானர்.

இதனைத்தொடர்ந்து யானையை வனத்துறை முகாமுக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில் நேற்று(31/05/2020)  நள்ளிரவு ஒரு மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து வனத்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி அருகிலுள்ள எம் ஆர் பாளையம் வனத்துறை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!