17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சரக காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

நிலக்கோட்டை சரக காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

எழுதியவர்: Askar June 1, 2020, 8:23 pm

நிலக்கோட்டை சரக காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் மிகவும் சிரமப்படுவது தொடர்பாகவும், சிரமப்படும் அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலக்குமாரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலக்குமார் முயற்சி செய்து நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 60 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை சங்கத்தின் நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் சசிகுமாரிடம் வழங்கினார்.

வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் உடனடியாக நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்களை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலக்குமாருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!